உலக பார்பர் தினம் ( சவரத்தொழிலாளர்) சமுதாயத்தின் ஒற்றுமையை நிலைநாட்டவும் அவர்களில் தேவையானோர்களுக்கு சமுதாய மக்களால் நிதியுதவி மும் நன்கொடையும் கொடுப்பதற்காக உலக பார்பர் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 மற்றும் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
நடுத்தர வயதுடைய பார்பர் முகச்சவரம், முடிவெட்டுதல், சிகையலங்காரம் மட்டுமல்லாமல் அறுவைச் சிகிச்சை யும் அந்த குறிப்பிட்ட இடத்தில் முடி மலித்தலும் செய்து வருகின்றனர்.அதனால் அவர்கள் பார்பர் அறுவைச் சிகிச்சையாளர் என்று அழைக்கப்படுகிறார்கள். கி.பி. 1092ம் ஆண்டிலிருந்து ரோமன் கத்தோலிக்கர்கள் முகச்சவரம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து முடி பராமரிப்புக்கு தேவை அதிகமானது. பார்பர் அறுவைச் சிகிச்சை மார்கள் கி.பி. 1096ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டில் தங்களின் முதல் ஸ்தாபனத்தை ஏற்படுத்தினார்கள். 9ம் மாதம் அதாவது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 ம் நாள் உலக பார்பர் தினம் அறிவிக்கப்பட்டது.
உலகளவில் பார்பர் தினம் அறிவிப்பானது ஒரு சர்வதேச அமைப்பான UNICEF உடன் இணைந்து ஆரம்பித்ததனால் பார்பர் சமுதாயம் உலகளவில் ஒற்றுமையுடன் இருக்க உந்துதலாக வரும் அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்விக்காக உலகளவில் நிதி திரட்டவும் முடிவானது.
பார்பர் தூண் ஆனது இரத்தக்கசிவுடன் தொடர்புடையது. சிகப்பு நிறம் இரத்தத்தையும் வெள்ளை நிறம் இரத்த க்கசிவை நிறுத்த கட்டப்படும் பருத்தி துனியிலான பான்டேஜ் மும் குறிக்கும். ஐரோப்பா வில் பார்பர் தூண் சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்திலும் அமெரிக்காவில் அது சிகப்பு, வெள்ளை மற்றும் ஊதா நிறத்திலும் காணப்படும்.
2019 ம் ஆண்டிற்கான உலக பார்பர் தினம் ” புளுபியர்டு ரிவென்ஜ்” என்னும் ஸ்தாபனத்தின் பங்களிப்புடனீ கொண்டாடப்படுவதால் இந்த ஆண்டு உறுப்பினர் களின் சேர்க்கை இரட்டிப்பானது. நீங்கள் இந்த அமைப்பில் பதிவு பெறாவிட்டாலும் அதற்கு நன்கொடை செலுத்தலாம்.நீங்கள் இந்த வருடம் பதிவு செய்தால் அடுத்த வருட பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறும்.
சலூன்கள் தங்களை ஆன்லைன் ல் இலவசமாக பதிவு செய்த உலக பார்பர் தினத்தை சிறப்பிக்க பல வழிகளில் உதவலாம். நீங்கள் பதிவு பெற்றவுடன் உலக பார்பர் தினத்தின் ஆதரவாளர் மற்றும் பங்கெடுப்பாளராக உதவுவதற்கு ஏதுவாக இலவச நல்வரவு பரிசு பெட்டகம் அனுப்பி வைக்கப்படும்.